தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர்.

இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக அறிவித்தனர். நயன்தாராவை தொடர்ந்து, மேயாத மான் புகழ் நடிகை இந்துஜா இப்படத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியது.

தற்போது இயக்குனர் அட்லீ, ஒளிப்பதிவாளர் GKவிஷ்ணுவுடன் அர்ச்சனா கல்பாத்தி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர்கள் எடுத்து கொண்ட புகைப்படத்தை, அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.