தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெறி, மெர்சல் என மாபெரும் வெற்றி படங்களை தந்தவர் அடுத்த படைப்பில் தளபதியை எப்படிப்பட்ட கேரக்டரில் காண்பிக்க போகிறார் என்ற ஆவல் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, கலை இயக்குனராக முத்துராஜ் தங்கவேல், எடிட்டராக ரூபன், ஸ்டண்ட் இயக்குனராக அனல் அரசு, பாடலாசிரியராக விவேக் போன்றோர் பணியாற்றுகின்றனர். அதுமட்டுமல்லாமல், இப்படம் பக்கா மாஸாக இருக்கும் என்றும் தெரிவித்தனர் படக்குழுவினர்.

தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய நபரான அர்ச்சனா கல்பதி, தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஜப்பான் டோக்கியோ விமானநிலையம் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதைக் கண்ட தளபதி ரசிகர்கள், தளபதி 63 ஜப்பானில் உருவாகிறதா என்ற கேள்வியில் உள்ளனர்.

Thalapathy 63 Producer Archana Kalpathi Releases The Picture From Tokyo