தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கவிருக்கும் தளபதி 63 படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் தளபதி விஜய்யுடன் நடிகர் கதிர் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிக்கிறார். அச்சு அசலாக நம்பி நாராயணனாகவே மாறியிருக்கிறார் நடிகர் மாதவன். மேக்கப்பில் அசத்துகிறார் மாதவன்.

இதுகுறித்து நடிகர் மாதவனின் மேக்கப்பை பாராட்டும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் நடிகர் கதிர். ஏற்கனவே விக்ரம் வேதா படத்தில் நடிகர் மாதவன் உடன் பணிபுரிந்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.