தமிழ் செய்திகள்

SK-16 ஷூட்டிங்கிற்கு இடையே ஹீரோயின்களின் ரகளை வைரல் வீடியோ !

By | Galatta |

சிவகார்த்திகேயனின் SK-16 ஷூட்டிங்குக்கு இடையே வெளியான ரகளையான வீடியோ !

SK-16 ஷூட்டிங்கிற்கு இடையே ஹீரோயின்களின் ரகளை வைரல் வீடியோ !
May 26, 2019 16:15 PM IST

இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன் சிவகார்த்திகேயன் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து ஒரு படம் நடிக்கிறார்.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் காரைக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஷூட்டிங்கில் இருந்து வெளியான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ஹீரோயின்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அணு இம்மானுவல் இருவரும் செய்யும் சேட்டைகளை இந்த வீடீயோவில் காணலாம்

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More