திருடன் போலீஸ்,உள்குத்து படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு அடுத்ததாக கண்ணாடி என்ற படத்தினை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் வித்தியாசமான Firstlook ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தில் மாநகரம்,நெஞ்சில் துணிவிருந்தால் படங்களில் நடித்த சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிக்கிறார்.

Sundeep Kishan Starrer Kannadi Directed by Carthik Raju First Single Released

அன்யா சிங்,கருணாகரன்,பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.V ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் விஜி சுப்ரமணியன் இந்த படத்தை தயாரிக்கிறார்.தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது.

Sundeep Kishan Starrer Kannadi Directed by Carthik Raju First Single Released

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த படத்தின் முதல் பாடலான கண்ணை கட்டி என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.