இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய இது நம்ம ஆளு படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் குறளரசன். STR போலவே இவரும் பன்முகத் திறமை வாய்ந்தவர். 

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், இவர் பாலிவுட்டில் இசையமைத்து வருகிறார் என்பது தான். கிட்டதட்ட 30-க்கும் மேற்பட்ட ஹிந்தி பாடல்களை முடித்து வைத்திருக்கிறாராம்.

மேலும் US-ல் உள்ள திறமைவாய்ந்த கலைஞர்களை வைத்து இன்டிபென்டன்ட் ஆல்பம் ஒன்றில் பணிபுரிந்துள்ளாராம். முழுக்கமுழுக்க நியூயார்க்கில் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.