தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கதிர்.தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இது தவிர சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

பிரபாகரன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள இந்த படத்திற்கு சர்பத் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.நகைச்சுவை நடிகர் சூரி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.7 Screen Studio மற்றும் Viacom18 ஸ்டுடியோஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அஜீஷ் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் வித்தியாசமான இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த போஸ்டரில் சூரி புலி வேஷம் போட்டிருப்பது போன்ற போஸ்டர் ஒன்றும் வெளியானது இதற்காக சூரிக்கு மேக்கப் போடப்பட்ட வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Sarbath padathirkaga

A post shared by Actor Soori (@soorimuthuchamy) on