தமிழ் செய்திகள்

தளபதி 63 குறித்த சூப்பர் அப்டேட் ! விவரம் உள்ளே

By | Galatta |

தளபதி 63 குறித்த சூப்பர் அப்டேட் ! விவரம் உள்ளே

தளபதி 63 குறித்த சூப்பர் அப்டேட் ! விவரம் உள்ளே
May 26, 2019 17:23 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 70 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.தற்போது இந்த படம் குறித்த சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தின் தமிழக திரையரங்க உரிமையை முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான Screen Scene கைப்பற்றும் என்று தெரிகிறது.இன்னும் எதுவும் முடிவாகாதநிலையில் Screen Scene நிறுவனம் தான் தமிழக திரையரங்க விநியோக உரிமையை கைப்பற்றும் என்று தெரிகிறது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More