ஆளப்போறன் தமிழன் பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர் பாடலாசிரியர் விவேக். தொடர்ந்து இவர் எழுதும் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்புள்ளது. எப்போதும் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடும் இவரது இயல்பான சுபாவம், நம்மில் ஒருவர் போல் நினைக்கச்செய்கிறது. 

Popular Lyricist Vivek Revealed The Time Taken To Write Aalaporaan Tamizhan Song Duration

தற்போது தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் பணியாற்றி வருகிறார் என்பது நாம் அறிந்தவையே.

Popular Lyricist Vivek Revealed The Time Taken To Write Aalaporaan Tamizhan Song Duration

ட்விட்டரில் ரசிகர் ஒருவர் உங்களால் மட்டும் எப்படி மிக குறுகிய நேரத்தில் பாடல் எழுத முடிகிறது என்று கேட்டபோது, ஆளப்போறன் தமிழன் பாடல் எழுத 1 மணிநேரம் 45 நிமிடம் ஆகியது. குறிப்பாக பெண் குரலில் வரும் பாடல் வரிகள் எழுத 15 நிமிடம் எடுத்துக்கொண்டேன். சில பாடல்கள் இரண்டு நாட்கள் கூட எடுக்கும், சில பாடல்கள் எளிதில் முடிவடையும் என பதிவு செய்துள்ளார்.

தன்னை நேசிக்கும் ரசிகனிடையே வெளிப்படையாக விளங்கும் விவேக்கின் இக்குணம் நிச்சயம் போற்றக்கூடியவை. கண்ணதாசன்,வாலி, வைரமுத்து போன்ற ஜாம்பவான்கள் வரிசையில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற நம் கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.

Popular Lyricist Vivek Revealed The Time Taken To Write Aalaporaan Tamizhan Song Duration