1979-ல் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் நீயா.கிட்டத்தட்ட அதே கதைக்கருவோடு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.நீயா 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சுரேஷ் இயக்கியுள்ளார்.ஷபீர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

Neeya Two Innoru Roundu Video Song Released Featuring Jai And Catherine Tresa

ஜெய் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.கேத்ரின் தெரசா,ராய் லட்சுமி,வரலக்ஷ்மி சரத்குமார்,பால சரவணன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Neeya Two Innoru Roundu Video Song Released Featuring Jai And Catherine Tresa

தற்போது இந்த படத்தின் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்னொரு ரவுண்டு எனும் இந்த பாடலை முகேஷ், DJ சத்யா, ஷபீர் பாடியுள்ளனர். கு கார்த்திக் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.