இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர்ஸ்டாரின் பேட்ட படத்தில் பட்டையை கிளப்பியது இவரது இசை.

அனிருத் கடந்த சில வருடங்களாக காதலர் தினத்தன்று ஒரு பாடலை வெளியிட்டு வருகிறார்.அந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஸ்பெஷல் பாடல் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

நானி,ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும் அனிருத் அந்த படத்தின் பாடலை காதலர் தின ஸ்பெஷல் பாடலாக வெளியிட தயாராக உள்ளார்.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Nani Shradha Srinath Starrer Jersey Movie First Single To Be Released on Valentines Day

இந்த பாடல் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை அடுத்து அனிருத் ரசிகர்கள் அனைவரும் பாடல் ரிலீசுக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.