காமெடிக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் SK எனப்படும் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ரோபோ ஷங்கர், சதீஷ், ராதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் Mr.லோக்கல். அதிகாலை காட்சிக்கு ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ஆடியன்ஸையும் சம்பாதித்திருப்பது SK-வின் மிகப்பெரிய சாதனை. 

Mr Local Video Song Released

வழக்கம்போல் தமிழ் சினிமாவில் வரும் கதை தான். ஓர் பணக்கார வீட்டு பெண் மிடில் கிளாஸ் ஹீரோவின் காதல் வலையில் எப்படி விழுகிறார் என்பது தான் Mr.லோக்கல் படத்தின் கதைச்சுருக்கம்.

Mr Local Video Song Released

படத்தின் நாயகன் SK-வின் நடிப்பு, டான்ஸ், காஸ்ட்யூம் என அனைத்தும் நன்றாக இருந்தாலும், ஹ்யூமர் அதாவது சிவகார்திகேயனுக்கே இருக்கும் ஹ்யூமர் அதிகளவில் ஒர்க் ஆகவில்லை என்று தான் கூறவேண்டும். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, டிவி சீரியல் தயாரிப்பாளராக கீர்த்தனா என்ற பாத்திரத்தில் பணக்கார வீட்டு பெண்ணாக அழகாக வந்திருந்தார்.

Mr Local Video Song Released

தற்போது இந்த படத்தின் நீ நெனச்ச பாடல் வீடியோ வெளியானது. ஆதி இசையில் உருவாகிய இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.