Massive Update From Archana Kalpati Regarding Firstlook Release of Thalapthy 63

தமிழ் செய்திகள்

அனல்பறக்கும் அப்டேட்டுடன் வந்த தளபதி 63 படக்குழுவினர் ! மகிழிச்சியில் ரசிகர்கள்

By | Galatta |

அனல்பறக்கும் அப்டேட்டுடன் வந்த தளபதி 63 படக்குழுவினர் ! மகிழிச்சியில் ரசிகர்கள்

அனல்பறக்கும் அப்டேட்டுடன் வந்த தளபதி 63 படக்குழுவினர் ! மகிழிச்சியில் ரசிகர்கள்
June 19, 2019 18:03 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் அப்டேட்க்காக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் Firstlook விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் Firstlook போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி மாலையும் இரண்டாவது போஸ்டர் விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 நள்ளிரவு 12 மணிக்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.இதனை அடுத்து ரசிகர்கள் Firstlook ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More