தமிழ் சினிமாவின் legendry இயக்குனராய் மக்கள் மனதில் பல ஆண்டுகள் நீங்கா இடம்பிடித்தவர் இயக்குனர் மணிரத்னம். அமைதியான திரை சூழல், மனதை வருடம் வசனங்கள், சீரான கதை கரு என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்திய பெருமை இவரை சேரும். 

Maniratnam Spotted With Jaggi Vasudev Playing Golf

இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச் சிவந்த வானம். உச்ச நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்கம் அல்லாது தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.

Maniratnam Spotted With Jaggi Vasudev Playing Golf

இந்நிலையில் மணிரத்னத்துக்கு சில நாட்கள் முன்பு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதென்றும், உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செய்தி வெளியானது.

Maniratnam Spotted With Jaggi Vasudev Playing Golf

தற்போது இயக்குனர் மணிரத்னம், சமூக ஆர்வலர் ஜக்கி வாசுதேவுடன் கோல்ஃப் விளையாடுவது போன்ற புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.