பேட்ட படத்தில் விஜய்சேதுபதியின் லுக் !
By Sakthi Priyan | Galatta | December 04, 2018 14:08 PM IST
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.
நேற்று வெளியான மரணமாஸ் பாடலை தொடர்ந்து, தற்போது பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் பாத்திரம் குறித்த போஸ்ட்டரை இன்று மாலை வெளியிட இருக்கின்றனர். மக்கள் செல்வனின் ரோல் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் உள்ளனர் சினிமா ரசிகர்கள்.
Thank you everyone for making #PettaFirstSingle a #MegaHitMaranaMass
— Sun Pictures (@sunpictures) December 4, 2018
Revealing @VijaySethuOffl Character poster Today at 6pm !@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @SimranbaggaOffc @Nawazuddin_S @SasikumarDir @trishtrashers pic.twitter.com/RVFd0AJpiS