இயக்குனரும்,நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அடுத்ததாக இயக்கி திரைக்கு வர தயாராக உள்ள திரைப்படம் ஹவுஸ் ஓனர்.Monkey கிரேட்டிவ் லேப்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கிஷோர்,ஸ்ரீரஞ்சனி,Lovelyn சந்திரசேகர்,பசங்க புகழ் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். 

ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.2015 சென்னையில் வந்த வெள்ளத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை பிகில் படத்தின் தயாரிப்பாளர்களான AGS என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளனர்.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஜுன் 28 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.படத்தின் ரிலீஸை முன்னிட்டு புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்