தமிழ் செய்திகள்

சூப்பர்ஸ்டாரின் தர்பார் குறித்த சுவாரஸ்ய தகவல் !

By | Galatta |

தர்பார் குறித்த சுவாரஸ்ய தகவல்

சூப்பர்ஸ்டாரின் தர்பார் குறித்த சுவாரஸ்ய தகவல் !
April 23, 2019 11:00 AM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர். 

பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

மேலும் நடிகர் ப்ரதீக், தர்பார் படத்தில் வில்லனாக நடிக்கப்போகிறாராம். தர்பார் படத்தில் வரும் வில்லனின் மகனாக இருக்கக்கூடும் என்ற செய்தி தெரியவந்தது.

தற்போது நடிகை நயன்தாரா இன்று முதல் தர்பார் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More