திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான படம் காஞ்சனா. முதலில் முனி என வெளிவந்த இப்படம். காஞ்சனா என்ற பெயரில் தொடர்ந்து 2 பாகங்களை வெளியிட்டது. தற்போது காஞ்சனா 3 இன்று 19-04-2019 வெளியானது. டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தை இயக்கி நடித்துள்ளார்.

Kanchana 3 Full Movie Review By Galatta In Tamill Featuring Raghava Lawrance In Lead

வழக்கமான ஹாரர் காமெடி கதை என்பதால் கதையை பற்றி பேச ஒன்றும் இல்லை. இருந்தாலும் விமர்சகர்களுக்காக இன்னொரு முறை கூற கடமை பட்டிருக்கிறோம். பேய் பயத்தில் இருக்கும் ராகவ ஒருபுறம், ஏழைகளுக்கு உதவும் காளியாக மறுபுறம் என இருவேடங்களில் நடித்துள்ளார் லாரான்ஸ்.

Kanchana 3 Full Movie Review By Galatta In Tamill Featuring Raghava Lawrance In Lead

இதுவரை வெளியான காஞ்சனா பாகங்களில் லாரன்ஸின் தெரிஞ்சிருச்சா எனும் வசனம் திரையில் வருகையில் அரங்கமே அதிர்கிறது. இந்த வசனம் லாரன்ஸின் ட்ரேட் மார்க் வசனம் என்று கூறினால் அது மிகையாகாது.

Kanchana 3 Full Movie Review By Galatta In Tamill Featuring Raghava Lawrance In Lead

படத்தில் உள்ள கதாநாயகிகள் சில காட்சிகளில் ஓவர் ஆக்ட்டிங் செய்வது பார்ப்போருக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் இவர்களின் நடிப்பு பலே. வெள்ளைக்கார மந்திரவாதிகள் ஆரம்பத்தில் அசத்தலாக தெரிந்தாலும், கிளைமாக்ஸ் காட்சியில் நகைச்சுவையாக தெரிகிறார்கள். முந்தைய பாகங்களுடன் ஒப்பிடுகையில் இந்த படத்தில் பயம் சற்று குறைவாகவே தெரிகிறது.

Kanchana 3 Full Movie Review By Galatta In Tamill Featuring Raghava Lawrance In Lead

படத்தின் பின்னணி இசை தேவையானவாறு இருந்தாலும், பாடல்கள் படும் மோசம். ட்ரைலரில் வருவது போல், மாஸ் இல்லை டபுள் மாஸ் போன்ற பஞ்ச் வசனங்கள் ரசிகர்களிடம் சரியாக சேரவில்லை. பேச வேண்டும் என்பதற்காக பேசுவது போல் அமைந்தது.

Kanchana 3 Full Movie Review By Galatta In Tamill Featuring Raghava Lawrance In Lead

CG எனப்படும் கிராபிக்ஸ் காட்சிகள் இந்த பாகத்தில் நன்றாகவே ஒர்க் ஆகியிருக்கிறது. ஆங்காங்கே ஓடும் குதிரை, மாடு இவற்றை பார்க்கும் போது நைட் அட் தி ம்யூசியம் பார்ப்பது போல் உள்ளது.

இரண்டு காட்சிகளில் வந்து போகும் சூரியின் நடிப்பு பெரிதளவில் இல்லை. மேலும் ஓவியாவின் மற்றோரு ஹேர்ஸ்டைல் இதெல்லாம் பார்க்கும் போது கால்-ஷீட்டை காரணமாக கொண்டே எடுக்கப்பட்டது போல் இருந்தது.

Kanchana 3 Full Movie Review By Galatta In Tamill Featuring Raghava Lawrance In Lead

இரவு நேர காட்சிகளை சரியாக படம்பிடித்ததால் ஒளிப்பதிவு அருமையாக இருந்தது. எடிட்டிங் பணியில் கூடுதல் கவனம் இருந்திருக்கலாம். இறுதியாக காஞ்சனா 3 பற்றி கூற வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு ஏற்ற சம்மர் விருந்து.

கலாட்டா ரேட்டிங் - 2.25/5