தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென ஒரு தனி இடத்தையும்,தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் ஜோதிகா.கடந்த ஆண்டும் செக்கச் சிவந்த வானம்,காற்றின் மொழி,நாச்சியார் என வெற்றி படங்களை கொடுத்தார்.இதையடுத்து தற்போது ஜோதிகா சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.

Jyothika Speech At Ratsasi Press Meet Replies To Lady Samuthirakani Topic

Dream Warrior Pictures தயாரித்துள்ள ராட்சசி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை கௌதம்ராஜ் இயக்கியுள்ளார்.சீன் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் ஜோதிகா பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார்.

Jyothika Speech At Ratsasi Press Meet Replies To Lady Samuthirakani Topic

இந்த படம் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இதனை முன்னிட்டு இன்று இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.அதில் பேசிய படத்தின் நாயகி ஜோதிகா இந்த படத்தின் ட்ரைலரை பலரும் பார்த்துவிட்டு என்னை லேடி சமுத்திரக்கனி என்றும் இந்த படத்தை சாட்டை என்றும் தெரிவித்திருந்தனர்.மக்களுக்கு சொல்லவேண்டிய விஷயத்தை சொல்லுவதில் தவறில்லை என்று தெரிவித்திருந்தார்.