எமனாக பொறுப்பேற்கும் யோகிபாபு ! தர்மபிரபு படத்தின் Sneak Peek
By Aravind Selvam | Galatta | June 26, 2019 18:19 PM IST
தற்போதைய நிலையில் அனைத்து படங்களிலும் இடம்பெற்றிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது யோகிபாபு தான்.இவர் இல்லாத படங்கள் மிகவும் குறைவு தான்.தற்போது தளபதி 63,தர்பார்,இந்தியன் 2,ஹீரோ,SK 16 என செம பிஸியாக பெரிய படங்களில் நடித்து வருகிறார்.
குர்கா,தர்மபிரபு போன்ற படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.இதில் Fantasy காமெடி படமாக உருவாகி வரும் தர்மபிரபு படத்தில் கருணாகரன்,ரமேஷ் திலக்,ஜனனி ஐயர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
முத்துக்குமரன் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படம் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.