ஆங்கில தொடர்களில் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் Game of Thrones.உலகம் முழுவதும் உள்ள பல ரசிகர்களின் Favourite ஆன இந்த தொடர் இந்த வருத்தத்துடன் நிறைவு பெற உள்ளது.2011 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு யாரும் எதிர்பாராத அளவு பெரிதாக இருந்தது.

பின்னர் 7 சீசன்களை கடந்த இந்த தொடர் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராக மாறியது.இந்த தொடரின் ட்ரைலர் மற்றும் மேக்கிங் வீடியோக்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இந்த தொடரின் கடைசி சீசன் நேற்று தொடங்கியது.

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் வரவேற்போடு நேற்று ஒளிபரப்பை தொடங்கிய Game of Thrones தொடர் வார வாரம் ஒரு Episode வெளியாகும்.நேற்று ஒளிபரப்பான முதல் எபிசோடின் சிறப்பு தகவல்கள் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்