தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் கிங் என போற்றப்படும் இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை இயக்கும் வல்லமை படைத்தவர். இயக்கம் அல்லாது நடிப்பிலும் அசத்துபவர். பொதுவாக படங்களில் எண்டு கார்டு வணக்கம், சுபம் என்று வந்துகொண்டிருந்த நேரத்தில் என்றும் நன்றியுடன் கே.எஸ். ரவிக்குமார் என்ற முத்திரையை திரையில் பதித்தவர். 

Galatta Tribute To Ace Director KS Ravikumar On His Birthday

கே.எஸ்.ரவிக்குமார் சார் பற்றி உங்கள் கருத்து என்ன ? என்று திரை துறை சார்ந்த கலைஞர்களிடம் கேட்டபோது அனைவரும் கூறிய வார்த்தை இதுமட்டும் தான். சார் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.. வேலைனு வந்துட்டா பெர்ஃபக்ட்டா செயல்படுவாரு. உச்ச நடிகர்கள் துவங்கி ஜூனியர் ஆர்டிஸ்ட் வரை அனைவரிடமும் ஒரே மாதிரி பழகும் மாமனிதர்.

Galatta Tribute To Ace Director KS Ravikumar On His Birthday

திரைக்கும் ரசிகர்களுக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்கும் திறன் கொண்ட இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவர் பிறந்தநாளான இன்று அவர் பற்றிய பதிவினை சமர்பிப்பதில் பெருமை கொள்கிறது கலாட்டா.

Galatta Tribute To Ace Director KS Ravikumar On His Birthday