தமிழ் செய்திகள்

அருண் விஜய்-கார்த்திக் நரேன் படத்தின் டைட்டில் இதுதான் !

By | Galatta |

அருண் விஜய்-கார்த்திக் நரேன் படத்தின் டைட்டில் இதுதான் !

அருண் விஜய்-கார்த்திக் நரேன் படத்தின் டைட்டில் இதுதான் !
May 26, 2019 18:37 PM IST

தமிழ் சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு வெற்றி கண்டவர் நடிகர் அருண் விஜய்.தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது .குற்றம் 23,செக்க சிவந்த வானம் என ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்துள்ளார்.

இவர் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ள தடம் படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவர் தற்போது பாக்ஸர் ,அக்னி சிறகுகள்,சாஹோ என்று செம பிஸியாக இருக்கிறார்.

மேலும் துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.தற்போது இந்த படத்திற்கு மாஃபியா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More