GALATTA BREAKING : சூர்யா 39 படம் பற்றிய சுவாரஸ்ய தகவல் ! தொடரும் விஸ்வாசம் மேஜிக்
By Sakthi Priyan | Galatta | April 22, 2019 13:00 PM IST
தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகரான சூர்யா நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார். நடிகர் சூர்யாவின் 39-வது படமான இந்த படத்தை ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இமான் இசையமைக்கப்போகிறாராம். இன்று மாலை 5 மணிக்கு இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரக்கூடும் என்று நெருங்கிய திரை வட்டாரங்கள் மூலம் தகவல் தெரியவந்தது.
இயக்குனர் சிவாவுடன் நடிகர் சூர்யா இணைவது இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். சிவா இயக்கத்தில் இறுதியாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அளித்து, ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் சிறப்பான இடத்தை பெற்று தந்தது.