2018-ம் ஆண்டு தமிழ் சினிமா துறை தனக்கென ஒரு பாதையை வழிவகுத்த ஆண்டு என்றே கூறலாம். அதிக படங்கள் அசராமல் வெளியாகி ரசிகர்களுக்கு திரை விருந்தளித்தது. இதன் மூலம் பல புதிய இயக்குனர்கள், நடிகர்கள், துணை நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்களை கண்டெடுத்தது தமிழ் சினிமா. 

Director Maari Selvaraja Bagged Best Director Award From RJ Balaji In Galatta Awards

அறிமுகமான முதல் படத்திலேயே தங்களது திறனை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்களை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ள மேடை தான் இந்த கலாட்டா விருதுகள். கலை தாகம் உள்ள அறிமுக கலைஞர்களுக்கு இவ்விருதினை அளித்து அங்கீகரித்து அழுகு பார்த்தது கலாட்டா.

Director Maari Selvaraja Bagged Best Director Award From RJ Balaji In Galatta Awards

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதில் சிறந்த இயக்குனருக்கான விருதை பரியேறும் பெருமாள் படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் RJ பாலாஜியிடன் பெற்றுக்கொண்டார்.

Director Maari Selvaraja Bagged Best Director Award From RJ Balaji In Galatta Awards

அப்போது மேடையில் பேசிய மாரி செல்வராஜ், டார்ஜிலிங்கிலிருந்து IAS ஒருவர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்தினாராம். மேலும் குடும்பத்துடன் தமிழ்நாட்டிற்கு வந்து பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து ரசித்தது பற்றி கூறி நெகிழ்ந்தார்.

Director Maari Selvaraja Bagged Best Director Award From RJ Balaji In Galatta Awards

பின்பு பேசிய RJ பாலாஜி, படம் குறித்தும் படம் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார்.