தமிழ் சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அசால்டாக நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ்.கைநிறைய படங்கள் வைத்துள்ள தனுஷ் தற்போது வெற்றிமாறனின் அசுரன்,மற்றும் துரை செந்தில்குமாரின் பெயரிடப்படாத படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

Dhanush Role in His Next Movie With Durai Senthilkumar Starring Sneha Revealed

கொடி படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒன்று சேர்வதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பதும் ஒரு ஹீரோயினாக சினேகா நடிக்கிறார் என்பதும் நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

Dhanush Role in His Next Movie With Durai Senthilkumar Starring Sneha Revealed

தற்போது தனுஷ் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் திருடனாக நடிப்பதாக நம்பத்தக்க வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.தனுஷ் திருடனாக நடிப்பது இதுவே முதல்முறை.இதுவரை ரௌடி,அரசியல்வாதி,VIP என்று கெத்து காட்டிய தனுஷ் திருடனாக தனது முத்திரையை எப்படி பதிக்கிறார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Dhanush Role in His Next Movie With Durai Senthilkumar Starring Sneha Revealed