சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படத்தை AR முருகதாஸ் இயக்க உள்ளார். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர். பேட்ட படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த நிஹாரிகா பசின் கான் இந்த படத்தில் காஸ்ட்டியூம் டிசைனராக பணியாற்ற உள்ளார். 

darbar

சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியது. மிகவும் ஸ்டைலிஷாக உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். தர்மதுரை படத்தில் நடித்த திருநங்கை ஜீவா இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் தெரியவந்தது.

yogibabuindharbar

ஜூன் 30-ம் தேதியுடன் தர்பார் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடியவுள்ளது. அதுமட்டுமல்லாமல் யோகிபாபு நடிக்கவிருக்கும் காட்சிகளும் ஜூன் 30-ம் தேதியுடன் முடியவுள்ளதாக செய்திகள் வெளியாகியது. யோகிபாபுவின் மீதியுள்ள பேட்ச் ஒர்க்ஸ் பகுதிகளை ஓரிரு மாதங்களில் படம்பிடிக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

rajinikanth