சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். 

இமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் வெளியிட்டது படக்குழு. அடுத்து டீஸர் எப்போது வெளியிடுவார்கள் என்று ஆவலாக இருக்கின்றனர் தல ரசிகர்கள்.

இந்நிலையில் சென்சார் குழுவின் ஒருவரான உமைர் சாந்து டுவிட்டரில், விஸ்வாசம் டீஸர் பார்த்துவிட்டேன் MindBlowing என்று ஒரே வார்த்தையில் கூறி முடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அஜித் மிக அழகாக உள்ளார் என்பதையும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.