சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தினை இரும்புத்திரை படத்தின் இயக்குனர் P.S.மித்ரன் இயக்குகிறார்.இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

Breaking Details on Sivakarthikeyan Next Project Aiming For Festival Release

கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் நாச்சியார் பட நாயகி இவானா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் மற்றும் எடிட்டராக ரூபன் ஒப்பந்தமாகியுள்ளனர்.

Breaking Details on Sivakarthikeyan Next Project Aiming For Festival Release

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.தற்போது இந்த படம் குறித்த பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.இந்த படத்தை 2019 கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking Details on Sivakarthikeyan Next Project Aiming For Festival Release