விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தில் நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்குகிறார் என்ற பேச்சு போய் கொண்டிருந்தது. இதற்கிடையே சில காரணங்களால் நடிகர் மாதவனே இப்படத்தை முழுவதும் இயக்கி வருகிறார். 

Bollywood Star Ron Donachi Joins The Movie Of Madhavan In Rocketry

அச்சு அசலாக நம்பி நாராயணனாகவே மாறியிருக்கிறார் நடிகர் மாதவன். சாக்லேட் பாய் கேரக்டர் மட்டுமல்லாமல் தனது நடிப்பின் அளவை பட்டைதீட்டும் நடிகர் மாதவனின் இம்முயற்ச்சி பாராட்டிக்குரியதாகும். சமீபத்தில் நம்பி நாராயணன் ரோலுக்காக மாதவன் மேற்கொண்ட மேக்கப் மற்றும் உடல் அமைப்பு மாற்றம் குறித்த வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டார் மாதவன்.

Bollywood Star Ron Donachi Joins The Movie Of Madhavan In Rocketry

படத்தில் நடிகை சிம்ரன் நடிக்கிறாராம். அதுவும் திருமதி நம்பி நாராயணனாக நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.

Bollywood Star Ron Donachi Joins The Movie Of Madhavan In Rocketry

Bollywood Star Ron Donachi Joins The Movie Of Madhavan In Rocketry

தற்போது படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதென மாதவன் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டைட்டானிக் படத்தில் நடித்த ரான் டோனாச்சி இதில் நடிக்கிறார் என்ற தகவலும் தெரியவந்தது.