தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக். காமெடி மற்றும் குணச்சித்திர கதா பாத்திரங்கள் ஏற்று நடிக்கும் விவேக், நடிப்பை தாண்டி பல சமூக நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

Ace Comedian And Actor Vivek Shares His Opinion About World Environment Day

சுற்றுசூழலை பாதுகாக்க மரம் நட வேண்டும் எனும் நம்பிக்கை விதையை ஜனங்கள் மனதில் விதைத்த பெருமை ஜனங்களின் கலைஞன் விவேக்கையே சேரும். சில நாட்கள் முன்பு மரம் நடுவது போன்ற வீடியோ பதிவினை பகிர்ந்தார். அதில் மரம் நடும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக பதிவு செய்துள்ளார்.

Ace Comedian And Actor Vivek Shares His Opinion About World Environment Day

தற்போது ட்விட்டரில், ஜுன் 5 உலக சுற்று சூழல் தினம். இளைஞர், மாணவர்கள் இப்போது இருந்தே ஏற்பாடு செய்தால் அன்று மரக்கன்றுகள் நடலாம். இதில் அக்கா, தங்கை, தாய்மார்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.நாம் நடும் கன்றை விட தாய்க்குலம் நடும் கன்று நன்கு வளரும் என்று பதிவு செய்துள்ளார்.

திரை பிரபலங்கள் இதுபோன்ற நல்ல செயல்களில் ஈடுபடுவது, அவர்களது ரசிகர்களையும் நல்ல பாதையில் பயணிக்கச்செய்யும். நடிகர் விவேக் தற்போது அட்லீ இயக்கும் தளபதி 64 படத்தில் நடித்துள்ளார். அவர் நடித்த வெள்ளை பூக்கள் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.