லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் 29 நவம்பர் வெளியான 2.0 படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது.

ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. 3டி திரையில் 4டி சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டு வெளியான இப்படம் இரண்டாம் நாளான இன்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது இப்படம் உலகளவில் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் ஷங்கர் மற்றும் படக்குழுவினரின் உழைப்பு வீண் போகவில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2.0. மேலும் சீனாவில் 47000 + 3டி திரைகள் சீனாவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் வசூல் வேட்டை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.