சித்து பிளஸ் 2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தொடர்ந்து பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார். நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

தமிழில் இரும்புத்திரை, வில் அம்பு, பியார் பிரேமா காதல் ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் நந்தா.இருவீட்டார் சம்மதத்தோடு இவ்ரகள் திருமணம் 2018ஆம் ஆண்டு நடந்தது.திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தி வருகிறார் சாந்தினி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ என்ற தொடரின் மூலம் சீரியல்களில் அறிமுகமானார் சாந்தினி.இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.ஜீ தமிழின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான ரெட்டை ரோஜா தொடரில் சில மாதங்களுக்கு முன் ஹீரோயினாக இணைந்தார் சாந்தினி.

இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.அக்ஷய் கமல் இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ளார்.தற்போது இந்த தொடர் 400 எபிசோடுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.இதனை ரசிகர்கள் மற்றும் சீரியல் குழுவினர் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.