யுவன் ஷங்கர் ராஜா தமிழ் சினிமாவின்  ரசிகர்களுக்கு  தனது ஒவ்வொரு பாடலின் மூலமும் விருந்து வைக்கும் ஓர் இசை விவசாயி. தமிழ் சினிமாவின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகப் பெரிய ஆளுமைகளாக இருந்த இசையமைப்பாளர்களை தொடர்ந்து 1990களுக்கு பின்பு ஒரு மிகப்பெரிய ஆளுமையாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் இசைப்புயல் A.R.ரகுமான் அவர்கள். அடுத்ததாக A.R.ரகுமானின் மகன் A.R.அமீன் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார். இசைஞானியின் மகனான யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் A.R.ரஹ்மானின் மகனான A.R.அமீர் இணைந்து பாடியுள்ள ஓர்  தெய்வீக பாடல் ரமலான் புனித நாளான இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. 

“தலா அல பத்ரு அலைனா”  என தொடங்கும் அப்பாடல் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.நபிகள் நாயகத்தைப் போற்றி மதீனா நகரின் மக்கள் பாடும் சிறப்புமிக்க ஓர் பாடல். முகமது நபிகளை போற்றி அவர் மதீனா நகருக்குள் வரும்போது அவரை வரவேற்று பாடும் ஒரு வரலாற்றுப்  பாடலாகும். மதினா நகருக்கு முகமது நபிகள் வருகை புரிந்த போது அவரை வரவேற்று பாடப்பட்ட இந்தப் பாடல் மிகப்பெரும் வரலாற்றை உள்ளடக்கியது. 

இது குறித்து பேசிய யுவன்ஷங்கர்ராஜா,

“இத்தருணத்தில் நான் மிக மகிழ்ச்சியாக உணர்கிறேன். TALA AL BADRU ALAYNA போன்ற தெய்வீக  பாடலை  இசையமைப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை. மேலும் எனது சகோதரர் AR அமீன் அவர்களுடன் இது போன்ற ஆன்மீக பாடலை இணைந்து பாடியது மிகப்பெரும் மகிழ்ச்சி. நம்மை சுற்றி எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்க, இப்பாடல் நம் ஆன்மாவில், மலர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றார்”. 

என தெரிவித்துள்ளார்

பாடகர் ஏ ஆர் அமீன் ,

“நபிகளை  போற்றும் தெய்வீகமான பாடலை அன்பு சகோதரர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பாடியது மனதிற்கு மிகப்பெரும் மகிழ்வை தந்துள்ளது. இந்த இனிய ஈகைத் திருநாள்  அனைவரது வீட்டிலும், அன்பையும், நிம்மதி  அருளட்டும்”

எனத் தெரிவித்துள்ளார்.

மதினாவில் உருவான இந்தப் பாடல் உலகம் முழுக்க இருக்கும் இஸ்லாமியர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற பாடல். அரபு மொழியில் இருக்கும் இப்பாடலை அப்துல் பாஸித் புகாரி அவர்கள் தமிழில்  மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா இப்பாடலுக்கு இசை அமைத்து அமீருடன் இணைந்து பாடியுள்ளார். இந்தப் பாடலின் மூலம் வரக்கூடிய வருமானத்தை ஏழை எளிய மக்களுக்கு அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.