"மங்காத்தா தீம் மாதிரி இருக்குமா?"- விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியின் தளபதி 68 பக்கா மாஸ் அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா! ட்ரெண்டிங் வீடியோ

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியின் தளபதி 68 அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா,yuvan shankar raja about vijay venkat prabhu in thalapathy68 | Galatta

முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடிக்க இருக்கும் தளபதி 68 திரைப்படம் குறித்து அதன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசி இருக்கிறார்கள். இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் திகழும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனது. அதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்திருக்கிறார். மாஸ்டர் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த லியோ திரைப்படம் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் திரிஷா லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

சமீபத்தில் லியோ திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. அடுத்ததாக இறுதிக்கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டிருக்கின்றன. வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி ஆயுத பூஜை வெளியிடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. லியோ திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் பக்கா எண்டர்டைனிங் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறை தளபதி விஜய் தனது 68 வது படத்தில் நடிப்பது தான். பிகில் என்ற பிளாக்பஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்திருக்கும் இந்த தளபதி 68 படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவன் சங்கர் ராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று மலேசியாவில் நடைபெற்றது. இந்த விழாவை முடித்து தற்போது சென்னை திரும்பிய இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, “சில ஆண்டுகளுக்கு பிறகு தளபதி விஜய் அவர்களுடன் தளபதி 68 படத்தில் பணியாற்ற இருக்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்?” என கேட்டபோது, “ரொம்ப சூப்பராக உணர்கிறேன் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.” என பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவரிடம், “தளபதி 68 படத்திற்கான பணிகளை தொடங்கி விட்டீர்களா?” என கேட்டபோது, "இல்லை இனிமேல் தான் ஆரம்பிக்க போகிறோம்.” என்று பதில் அளித்தார். தொடர்ந்து “மங்கத்தா திரைப்படத்தின் தீம் மியூசிக் போன்று தளபதி 68 திரைப்படத்திலும் எதிர்பார்க்கலாமா?” என கேட்டபோது, “கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்” என்றார். யுவன் சங்கர் ராஜாவின் அந்த பேட்டியின் முழு வீடியோ இதோ…
 

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட பக்கா ஆக்ஷன் ட்ரீட்… செம்ம ஸ்டைலான ‘His Name Is John’ பாடல் இதோ!
சினிமா

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட பக்கா ஆக்ஷன் ட்ரீட்… செம்ம ஸ்டைலான ‘His Name Is John’ பாடல் இதோ!

சினிமா

"எல்லாமே இந்த ஒரு மனிதரால் தான்..!"- சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வெற்றிக்கு தயாரிப்பாளரின் எமோஷனலான அறிக்கை இதோ!

சினிமா

"நான் ஏலியன் வேடத்தில் நடிக்கவில்லை!"- தன் அடுத்த அசத்தலான தமிழ் பட ஸ்பெஷல் தகவல் கொடுத்த டாப்ஸி! விவரம் இதோ