மிரட்டலான புதிய லுக்கில் பிரபாஸ்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ப்ராஜெக்ட் கே பட அதிரடியான GLIMPSE இதோ!

ரசிகர்கள் எதிர்பார்த்த பிரபாஸின் ப்ராஜெக்ட் கே பட புது GLIMPSE,prabhas in project k movie new glimpse out now | Galatta

இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் புது GLIMPSE தற்போது வெளியானது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் பிரபாஸ் இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்தார். அந்த வகையில் பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. அப்படி பெரும் எதிரபார்ப்போடு வெளிவந்த பிரபாஸின் சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தன. 

இந்த வரிசையில் கடைசியாக ராமாயண கதைக்களத்தைக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பிரம்மாண்டமான ஆதிபுரூஷ் திரைப்படம், தொடர் ஏமாற்றங்களை கொடுத்து வரும் பிரபாஸின் படங்களுக்கு பிரேக் கொடுத்து ரசிகர்களை திருப்தி படுத்துமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வசூல் ரீதியில் வரவேற்பை பெற்ற போதும் ரசிகர்களுக்கு ஆதிபுருஷ் திரைப்படமும் பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கே ஜி எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் - பார்ட் 1 திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த சலார் படத்தின் டீசர் கேஜிஎஃப் பாணியிலேயே இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் அதே சமயத்தில் கலவையான விமர்சனங்களும் கிளம்பி இருக்கின்றன. இந்த சலார் படமாவது விமர்சன ரீதியிலும் வர்த்தக ரீதியிலும் பிரபாஸுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்

இந்த வரிசையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பக்கா சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இந்த ப்ராஜெக்ட் திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, முன்னணி கதாபாத்திரங்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், தீபிகா படுகோனே மற்றும் திஷா பதாணி ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்திரி அவர்களின் பயோபிக் படமாக வெளிவந்த மகாநதி திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் நாக் அஸ்வின் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தை இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் அவர்கள் ப்ராஜெக்ட் கே திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் முதல் டீசர் வீடியோவிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். வருகிற ஜூலை 20ம் தேதி அமெரிக்காவிலும் ஜூலை 21 ஆம் தேதி இந்தியாவிலும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் முதல் GLIMPSE வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் போஸ்டர் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது நடிகர் பிரபாஸின் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யக்கூடிய புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர் மிரட்டலான புதிய லுக்கில் பிரபாஸ் இருக்கும் அந்த போஸ்டர் இதோ…
 

The Hero rises. From now, the Game changes 🔥

This is Rebel Star #Prabhas from #ProjectK.

First Glimpse on July 20 (USA) & July 21 (INDIA).

To know #WhatisProjectK stay tuned and subscribe: https://t.co/AEDNZ3ni5Q@SrBachchan @ikamalhaasan @deepikapadukone @nagashwin7pic.twitter.com/oRxVhWq4Yn

— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 19, 2023

சினிமா

"எல்லாமே இந்த ஒரு மனிதரால் தான்..!"- சிவகார்த்திகேயனின் மாவீரன் பட வெற்றிக்கு தயாரிப்பாளரின் எமோஷனலான அறிக்கை இதோ!

சினிமா

"நான் ஏலியன் வேடத்தில் நடிக்கவில்லை!"- தன் அடுத்த அசத்தலான தமிழ் பட ஸ்பெஷல் தகவல் கொடுத்த டாப்ஸி! விவரம் இதோ

ப்ராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்காவில் கார் ரேலி செய்த பிரபாஸ் ரசிகர்கள்... ட்ரெண்டாகும் வீடியோ உள்ளே!
சினிமா

ப்ராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்காவில் கார் ரேலி செய்த பிரபாஸ் ரசிகர்கள்... ட்ரெண்டாகும் வீடியோ உள்ளே!