முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் சியான் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். வெகு நாட்களுக்கு பிறகு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் பணியாற்றுகிறார். அக்டோபர் புகழ் நடிகை பணிதா சந்து இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

Youtube Sensation Actor Anbu To Join The Crew Of Aadhithya Varma Featuring Dhruv And Banita In Lead

சமீபத்தில் ஆதித்ய வர்மா எனும் டைட்டிலை பெற்றுள்ளது இந்த படம். கிரிசாயா இயக்கும் இந்த படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பிரியா ஆனந்த் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும் நாம் அறிந்தவையே. மேலும் யார் யார் இந்த படத்தில் இணைகிறார்கள் என்ற செய்தியுடன் உங்கள் பார்வைக்கு வருகிறோம்.

Youtube Sensation Actor Anbu To Join The Crew Of Aadhithya Varma Featuring Dhruv And Banita In Lead

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், youtube பிரபலம் அன்பு இந்த படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா போன்ற படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அன்பு, இந்த படத்திலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube Sensation Actor Anbu To Join The Crew Of Aadhithya Varma Featuring Dhruv And Banita In Lead