வாலு, ஸ்கெட்ச் போன்ற படத்திற்கு பிறகு விஜய் சந்தர் இயக்கவிருக்கும் படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் நடிக்கவுள்ளனர்.

Will Thala Ajith Meet Makkal Selvan Vijay Sethupathi In Hyderabad In Sets Of Vijay Chandar Movie

இவர்களுடன் பரோட்டா சூரி, நாசர், அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் போன்ற நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளனர். விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்கள். 

Will Thala Ajith Meet Makkal Selvan Vijay Sethupathi In Hyderabad In Sets Of Vijay Chandar Movie

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கவுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியானது.

Will Thala Ajith Meet Makkal Selvan Vijay Sethupathi In Hyderabad In Sets Of Vijay Chandar Movie

ஏற்கனவே வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் தல 59 படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடந்துவருவதால், மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை அஜித் சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்ற ஆர்வம் நிறைந்த கேள்வியில் உள்ளனர் ரசிகர்கள்.

Will Thala Ajith Meet Makkal Selvan Vijay Sethupathi In Hyderabad In Sets Of Vijay Chandar Movie

சமீபத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குனர்கள் ப்ரியதர்ஷன், வெங்கட் பிரபு போன்ற பிரபலங்களை ஹைதராபாத்தில் சந்தித்து வரும் அஜித், விஜய் சேதுபதியை பார்க்க அதிகம் வாய்ப்பு உள்ளது என்று கூறினால் மிகையாகாது.