திரையுலகில் நடிகர், இயக்குனர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் எனப் பல திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் நடிகர் சிம்பு. இவர் முதன் முறையாக இசையமைத்த படம் ‘சக்க போடு போடு ராஜா’. இந்தப் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். 

இசையை விட்டு செக்கச் சிவந்த வானம் படத்தில் பிஸியானார். ஓவியா நடித்துள்ள 90 ml படத்துக்கு இசையமைத்து வருகிறார் சிம்பு. தற்போது நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்துவருகிறார் என்பது நாம் அறிந்தவையே.

சமீபத்தில் பெரியார் குத்து பாடலை வெளியிட்டார். இதற்கிடையில் ஓவியா படத்திற்கு தன்னுடைய முழு திறமையையும் காட்டி இசையமைத்து வருகிறார் STR. இப்படத்தை அனிதா உதீப் இயக்குகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக, அந்தோணி எடிட்டராக பணியாற்றுகிறார்கள்.

தற்போது இப்படத்தின் பீர் பிரியாணி பாடலின் லிரிக் வீடியோவை நடிகை த்ரிஷா வெளியிடுகிறார். VTV படத்திற்கு பிறகு ஓவியா நடிப்பில் STR இசையமைக்கும் இப்படத்திற்கு த்ரிஷா ஓர் அங்கமாக இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.