சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் தெறித்தது.    

தல அஜித்தின் இரண்டு கெட்டப்புகளும் ரசிகர்களை மிகவும் கவர்ந்த வண்ணமுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் தல அஜித் இணையும் விஸ்வாசம் நான்காவது படமாகும். 

ஹைதெராபாத் மற்றும் மும்பையில் இதன் படப்பிடிப்புகள் நடந்தன என்ற செய்திகள் வெளியாகியது. மேலும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.   

தற்போது வெளியாகியுள்ள செய்தி என்னவென்றால், விஸ்வாசம் படத்தின் சண்டை காட்சிகள் புனேவில் சிறப்பாக முடிவடைந்து என ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

மேலும் ஜென்டில்மேன் அஜித் சார் உடன் பணிபுரிந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என குறிப்பிட்டுளார். துணிச்சலாக ஸ்டண்ட் காட்சிகளில் மிகவும் ஈடுப்பட்டு நடிக்கும் தல அஜித்தின் சண்டை காட்சிகள் திரையரங்கில் வரும்போது, அரங்கமே அதிரும் என்று கூறினால் மிகையாகாது. 

Viswasam Movie Stunt Sequence Successfuly Completed Said By Stunt Choreographer Dhilip Subbarayan