விஸ்வாசம் படத்தின் பாடல் அப்டேட் ! மகிழ்ச்சியில் தல ரசிகர்கள் !
By Sakthi Priyan | Galatta | November 16, 2018 15:09 PM IST
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் தெறித்து வருகிறது.
வீரம், வேதாளம், விவேகம் இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவாவுடன் தல அஜித் இணையும் விஸ்வாசம் நான்காவது படமாகும்.
ஹைதெராபாத் மற்றும் மும்பையில் இதன் படப்பிடிப்புகள் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தற்போது வெளியான செய்தி என்னவென்றால், படத்தின் பாடலாசிரியர் விவேகா என்பது தான். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நேற்று இசையமைப்பாளர் டி.இமானை சந்தித்து விஸ்வாசம் படத்திற்கான மெலடி பாடலுக்கு எழுதியுள்ளார்.
Yesterday we met for one more song in #Viswasam its a wonderful melody track from @immancomposer thanks to @directorsiva #Ajith #Thala #ViswasamUpdates pic.twitter.com/LwUPHsBW6k
— Viveka Lyricist (@Viveka_Lyrics) November 16, 2018
மேலும் விஸ்வாசம் படத்தில் மனதை தொடும் அளவிற்கு பின்னணி பாடல் அமைந்திருப்பதாக பதிவிட்டுளார்.
Its a heart touching background song #Viswasam
— Viveka Lyricist (@Viveka_Lyrics) November 16, 2018