சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர், தம்பி ராமய்யா ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவாளராகவும், ரூபன் எடிட்டராகவும், திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணியாற்றுகிறார்கள். இப்படத்தின் அடிச்சு தூக்கு பாடலை சமீபத்தில் வெளியிட்டது படக்குழு. அடுத்து டீஸர் எப்போது வெளியிடுவார்கள் என்று ஆவலில் இருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

தற்போது இப்படத்தின் ஒளிப்பதிவாளரான வெற்றி தனது ட்விட்டரில், புகைப்படம் ஒன்றை பகிர்ந்துகொண்டதுடன் செம சீனா செதற வைக்கணும் பாத்தா பதற வைக்கணும் என பதிவிட்டிருக்கிறார். இதனால் படத்தின் காட்சிகளை கட்சிதமாக வடிவமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் தல ரசிகர்கள்.