தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வினால் தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயரை சம்பாதித்தவர் விஷ்ணு விஷால்.இவர் நடித்துள்ள FIR திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இவர் அடுத்ததாக மோகன்தாஸ் படத்தில் நடித்துள்ளார்.

மோகன்தாஸ் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவிதேஜாவுடன் சில மாதங்களுக்கு முன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் விஷ்ணு விஷால்.

இருவரும் இணைந்து படத்தில் நடிக்கிறார்களா அல்லது வேறு விஷயமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.தற்போது இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படமான கட்டா குஸ்தி படத்தினை விஷ்ணு விஷால் மற்றும் ரவிதேஜா இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் Bilingual ஆக வெளியாகவுள்ளது.

இந்த படத்தினை செல்லா அய்யாவு இயக்கவுள்ளார்.ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.குத்துச்சண்டையை மையப்படுத்தி இந்த படம் உருவாகவுள்ளது.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது,படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.