தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.கோலமாவு கோகிலா,டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் அதிரடியான ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.

இந்த படம் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக தயாராகி வருகிறது.தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தில் தீவிரவாத காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த படத்தினை வெளியிட குவைத் அரசு தடை விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இது போன்ற சண்டை காட்சிகள் அதிகம் உள்ள காட்சிகள் தீவிரவாதம் போன்ற காட்சிகள் இடம்பெறும் படங்களை குவைத்தில் தொடர்ந்து தடை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே துல்கர் சல்மானின் குரூப் மற்றும் விஷ்ணு விஷாலின் FIR போன்ற படங்கள் அங்கு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.