தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் மீண்டும் காவல்துறை அதிகாரியாக தற்போது நடித்துவரும் திரைப்படம் லத்தி. இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் படமாக தயாராகிவரும் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விரைவில் லத்தி படத்தின் படப்படிப்பு நிறைவடையவுள்ளது.

இதனைத்தொடர்ந்து முதல்முறை இயக்குனராகவும் களமிறங்கும் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி.

விஷாலுக்கு ஜோடியாக மார்க் ஆண்டனி படத்தில் ரித்து வர்மா கதாநாயகியாக நடிக்க, மிரட்டலான கதாபாத்திரத்தில் S.J.சூர்யா நடிக்கிறார். மேலும் சுனில் வர்மா, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஷாலின் எனிமி திரைப்படத்தை தொடர்ந்து மார்க் ஆண்டனி திரைப்படத்தையும் மினி ஸ்டுடியோ சார்பில் வினோத் குமார் தயாரிக்கிறார்.

அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பு செய்யும் மார்க் ஆண்டனி படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று (மே 5ஆம் தேதி) விஷால்-S.J.சூர்யாவின் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.