சிவகார்த்திகேயனின் டான் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
By Aravind Selvam | Galatta | May 05, 2022 13:34 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இந்த படம் கடந்த 2021 அக்டோபர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அடுத்ததாக இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் அயலான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறதது.அயலான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.இதனைஅடுத்து இவர் நடிக்கும் டான் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,பாலா சரவணன்,RJ விஜய்,சிவாங்கி,கெளதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் மே 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் விழா நாளை சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் நடைபெறவுள்ளது.இதுகுறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
📢 A grand pre-release event & trailer launch of our #DON will be happening tomorrow 🤩
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) May 5, 2022
Jalukku Jalukku Jalukku 🥳🕺💃#DONfromMay13@Siva_Kartikeyan @KalaiArasu_ @Udhaystalin @LycaProductions @RedGiantMovies_ @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @SonyMusicSouth pic.twitter.com/wTg8yeiPJz