விஷால் - SJசூர்யாவின் மாஸ் என்டர்டெய்னர் மார்க் ஆண்டனி பட வெயிட்டான ட்ரீட்… அட்டகாசமான அதிருதா பாடல் இதோ!

விஷால் - SJசூர்யாவின் மார்க் ஆண்டனி பட அதிருதா பாடல் வெளியீடு,vishal sj suryah in mark antony movie adhirudha song out now | Galatta

விஷால் மற்றும் S.J.சூர்யா இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்திலிருந்து செம வெயிட்டாக முதல் பாடலான அதிருதா பாடல் தற்போது வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ந்து அதிரடி ஆக்சன் படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் அடுத்ததாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் #விஷால்34 படத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஏற்கனவே நடித்த தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் வகையில் 3வது முறையாக இணைந்து இருக்கும் விஷால் நடிப்பில் உருவாகும் விஷால் 34 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர். தொடர்ந்து இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். விரைவில் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கும் என தெரிகிறது. 

இதனிடையே SJ.சூர்யா உடன் இணைந்து விஷால் நடித்திருக்கும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. தனக்கென தனி ஸ்டைலில் தொடர்ச்சியாக பல விதமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் SJ.சூர்யா அடுத்தடுத்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் கேம் சேன்ஜராகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அதிரடி திரைப்படமாக தயாராகி இருக்கும் டபுள் எக்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து SJ.சூர்யா நடித்திருக்கிறார் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முனனணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மார்க் ஆண்டனி படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த மார்க் ஆண்டனி படத்தின் டீசர் பெரும் ஆர்வத்தை கிளப்பி உள்ளது சுவாரசியமான டைம் டிராவல் கான்செப்ட்டை கொண்டு 1960 காலகட்டத்தை கதைக்களமாக கொண்ட வித்தியாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படம் இந்த 2023ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி வெளியீடாக ரிலீஸாகவுள்ளது. அதற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் முதல் பாடலான அதிருதா பாடல் தற்போது வெளியானது. T.ராஜேந்தர் அவர்களின் மிரட்டலான குரலில் வெளிவந்திருக்கும் இந்த அதிருதா பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.
 

பிக்பாஸ் போட்டியாளரும் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் திடீரென மருத்துவமனையில் அனுமதி! வைரலாகும் புகைப்படம்
சினிமா

பிக்பாஸ் போட்டியாளரும் செய்தி வாசிப்பாளருமான அனிதா சம்பத் திடீரென மருத்துவமனையில் அனுமதி! வைரலாகும் புகைப்படம்

ராகவா லாரன்ஸ் முதல் முறை தன் தம்பி உடன் இணையும் புதிய பவர்ஃபுல் படம்... டைரி இயக்குனரின் அடுத்த படைப்பு! விவரம் உள்ளே
சினிமா

ராகவா லாரன்ஸ் முதல் முறை தன் தம்பி உடன் இணையும் புதிய பவர்ஃபுல் படம்... டைரி இயக்குனரின் அடுத்த படைப்பு! விவரம் உள்ளே

பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தின் பெரிய சர்ப்ரைஸ்... முதல் GLIMPSE குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தின் பெரிய சர்ப்ரைஸ்... முதல் GLIMPSE குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!