'ஹேய் இங்க நான் தான் கிங்!'- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட பக்கா மாஸான ஹுக்கும் பாடல் முன்னோட்டம்! அதிரடி வீடியோ இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் பட ஹுக்கும் பாடல் ப்ரோமோ வெளியீடு,Super star rajinikanth jailer movie second single hukum promo out now | Galatta

பக்கா மாஸாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலான நடிப்பில் வர இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ஹுக்கும் பாடலின் அதிரடி ப்ரோமோ தற்போது வெளியானது. கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ஸ்டைலால் ரசிகர்களை கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியது. ஆனாலும் அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் தயாராகும் படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில், அடுத்ததாக இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வருமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஒரு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்திய திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பகுதி படபிடிப்பை நிறைவு செய்து இருக்கிறார். அடுத்ததாக மீண்டும் லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை நாயகனாக நடிக்கிறார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் தலைவர் 170 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

இதனிடையே முதல்முறையாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்க, நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்யும் ஜெயிலர் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சமீபத்தில் வெளிவந்து ப்ரெண்டிங் ஹிட்டானது. தொடர்ந்து ஜெயிலர் படத்தின் 2வது பாடலான "ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்" என சூப்பர் ஸ்டாரின் மிரட்டலான குரலில் அடுத்த அதிரடியான மாஸ் ட்ராக் வருகிற ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த பாடலின் செம்ம மாஸான ஒரு ப்ரோமோ வீடியோவை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். 'இங்க நான் தான் கிங்' என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பஞ்ச் வசனத்தோடு அதிரடியாக வந்த அந்த ப்ரோமோ வீடியோ தற்போது சோசியல் மீடியாவை அதிர வைத்திருக்கிறது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

Goosebumps guaranteed #HukumPreview is here!🔥#Hukum ready to 💥🌪️ from Aug 17th @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @soupersubu #Jailer #JailerSecondSingle pic.twitter.com/TIER1OZsJy

— Sun Pictures (@sunpictures) July 15, 2023

பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தின் பெரிய சர்ப்ரைஸ்... முதல் GLIMPSE குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தின் பெரிய சர்ப்ரைஸ்... முதல் GLIMPSE குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!

ஹாட்ரிக் ஹிட்டுக்கு இணைந்த விஷால் - ஹரி கூட்டணியில் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளர்... விஷால்34 பட ஷூட்டிங்கின் அதிரடி அறிவிப்பு!
சினிமா

ஹாட்ரிக் ஹிட்டுக்கு இணைந்த விஷால் - ஹரி கூட்டணியில் சேர்ந்த முன்னணி இசையமைப்பாளர்... விஷால்34 பட ஷூட்டிங்கின் அதிரடி அறிவிப்பு!

சினிமா

"தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங் ஓவர்!"- 6 மாதங்களில் 125 நாட்கள் படப்பிடிப்பை முடித்த லோகேஷ் கனகராஜ்... வைரல் புகைப்படம் இதோ