ராகவா லாரன்ஸ் முதல் முறை தன் தம்பி உடன் இணையும் புதிய பவர்ஃபுல் படம்... டைரி இயக்குனரின் அடுத்த படைப்பு! விவரம் உள்ளே

ராகவா லாரன்ஸ் முதல் முறை தன் தம்பி உடன் இணையும் புதிய படம்,raghava lawrence and his brother joins for new movie with diary director | Galatta

ராகவா லாரன்ஸ் மாஸ்டர் தனது அடுத்த புதிய திரைப்படமாக நடிக்கும் பவர்ஃபுல் திரைப்படத்தில் தனது தம்பி எல்வின் அவர்களோடு இணைகிறார். நடன கலைஞராக தனது திரைப் பயணத்தை தொடங்கி பின்னர் நடன இயக்குனராக ரசிகர்களிடையே மிகப் பிரபலமடைந்து, தொடர்ந்து நடிகர் & இயக்குனர் என பிளாக்பஸ்டர் திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வரும் ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ருத்ரன். கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு வெளியீடாக ரிலீசான ருத்ரன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வரிசையாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கின்றன.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டரான சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் பி.வாசு அவர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த சந்திரமுகி 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி வெளியிடாக ரிலீஸாக இருக்கிறது. அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் அவர்களின் திரைக்க்கதையில் இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரில்லர் திரைப்படமான அதிகாரம் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய படங்களில் ஒன்றாக கொண்டாடப்பட்ட ஜிகர்தண்டா திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமாக உருவாகும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த 2023 ஆம் ஆண்டின் தீபாவளி வெளியீடாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தனது காஞ்சனா சீரிஸ் படங்களின் வரிசையில் அடுத்த படைப்பாக துர்கா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார்.

விரைவில் தனது தம்பி எல்வின் அவர்கள் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அறிவித்திருந்தார். அதன்படியே தனது தம்பி எல்வின் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படத்தில் ராகவா லாரன்ஸும் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா, டைரி, ருத்ரன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் எஸ் கதிரேசன் அவர்களின் தயாரிப்பில் அவரது 12 வது தயாரிப்பாக உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை அருள்நிதி நடிப்பில் வெளிவந்த டைரி திரைப்படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் இந்த புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில் இந்த புதிய திரைப்படத்தின் பட பூஜை தற்போது நடைபெற்று இருப்பதாக தெரிகிறது இந்த பட பூஜையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது தம்பி எள்வின் ஆகியோரோடு படத்தின் தயாரிப்பாளர் S.கதிரேசன் அவர்கள் படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் ஆகியோரோடு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களும் இணைந்து இருக்கிறார். இந்த புதிய படத்தின் பட பூஜை புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

First ever time versatile talent @elviinvinu_off & @offl_Lawrence Master are coming together for a Dynamic, Powerful project #ProductionNo12 😎🔥

Produced By @kathiresan_offl
Directed by @innasi_dir@IamVaishaliRaj #5StarCreations @onlynikil pic.twitter.com/roV6SM71kd

— Five Star Creations LLP (@5starcreationss) July 15, 2023

சினிமா

"தளபதி விஜயின் லியோ பட ஷூட்டிங் ஓவர்!"- 6 மாதங்களில் 125 நாட்கள் படப்பிடிப்பை முடித்த லோகேஷ் கனகராஜ்... வைரல் புகைப்படம் இதோ

'இப்போதைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்!'- மாவீரனில் சிவகார்த்திகேயன் உடன் பணியாற்றியது பற்றி மனம் திறந்த சரிதா! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'இப்போதைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்!'- மாவீரனில் சிவகார்த்திகேயன் உடன் பணியாற்றியது பற்றி மனம் திறந்த சரிதா! ட்ரெண்டிங் வீடியோ

போர்த் தொழில் படத்திற்கு பின் சரத்குமாரின் அடுத்த அதிரடி போலீஸ் அவதாரம்... பரம்பொருள் படத்தின் கவனிக்க வைக்கும் டீசர் இதோ!
சினிமா

போர்த் தொழில் படத்திற்கு பின் சரத்குமாரின் அடுத்த அதிரடி போலீஸ் அவதாரம்... பரம்பொருள் படத்தின் கவனிக்க வைக்கும் டீசர் இதோ!