பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தின் பெரிய சர்ப்ரைஸ்... முதல் GLIMPSE குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!

பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தின் முதல் GLIMPSE குறித்த அறிவிப்பு,prabhas in project k movie first glimpse announcement | Galatta

ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் பிரபாஸின் பிரம்மாண்ட படைப்பான ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் முதல் GLIMPSE ரிலீஸ் குறித்த அதிரடி அறிவிப்பு வெளியானது. தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் பிரபாஸ் இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்தார். அந்த வகையில் பாகுபலி படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால் அப்படி பெரும் எதிரபார்ப்போடு வெளிவந்த பிரபாஸின் சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்தன. கடைசியாக ராமாயண கதைக்களத்தைக் கொண்டு பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாரான ஆதிபுரூஷ் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் வெளிவந்தது. தொடர் ஏமாற்றங்களை கொடுத்து வரும் பிரபாஸின் படங்களில் ஆதிபுரூஷ் திரைப்படமாவது ரசிகர்களை திருப்தி படுத்துமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வசூல் ரீதியில் வரவேற்பை பெற்ற போதும் ரசிகர்களுக்கு ஆதிபுருஷ் திரைப்படம் மீண்டும் ஏமாற்றத்தையே கொடுத்தது. படத்தின் நீளமும் மோசமான கிராஃபிக்ஸ் பணிகளும் மிகவும் விமர்சிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக கே ஜி எஃப் படங்களின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சலார் - பார்ட் 1 திரைப்படம் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. சமீபத்தில் வெளிவந்த சலார் படத்தின் டீசர் கேஜிஎஃப் பாணியிலேயே இருப்பதால் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பும் அதே சமயத்தில் கலவையான விமர்சனங்களும் கிளம்பி இருக்கின்றன. இந்த வரிசையில் பிரபாஸ் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே. வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பக்கா சயின்ஸ் ஃபிக்சன் ஆக்சன் திரில்லர் படமாக உருவாகும் இந்த ப்ராஜெக்ட் திரைப்படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, முன்னணி கதாபாத்திரங்களில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், உலக நாயகன் கமல்ஹாசன், தீபிகா படுகோனே மற்றும் திஷா பதாணி ஆகியோர் நடிக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த ப்ராஜெக்ட் கே திரைப்படத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் நடிகை சாவித்திரி அவர்களின் பயோபிக் படமாக வெளிவந்த மகாநதி திரைப்படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் அவர்கள் ப்ராஜெக்ட் கே திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் முதல் அறிவிப்பு வந்த சமயத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் முதல் டீசர் வீடியோவிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். இந்த நிலையில் காத்திருந்த ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் முதல் GLIMPSE வீடியோ ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியானது. வருகிற ஜூலை 20ம் தேதி அமெரிக்காவிலும் ஜூலை 21 ஆம் தேதி இந்தியாவிலும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் முதல் GLIMPSE வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். அதிரடியான அந்த போஸ்டர் இதோ…
 

The world awaits the ultimate showdown.
Brace yourselves for a glimpse into the world of #ProjectK on July 20 (USA) & July 21 (INDIA).

Stay tuned and Subscribe: https://t.co/AEDNZ3ni5Q#Prabhas @SrBachchan @ikamalhaasan @deepikapadukone @nagashwin7 @VyjayanthiFilmspic.twitter.com/MMc60mrHxH

— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 14, 2023

'இப்போதைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்!'- மாவீரனில் சிவகார்த்திகேயன் உடன் பணியாற்றியது பற்றி மனம் திறந்த சரிதா! ட்ரெண்டிங் வீடியோ
சினிமா

'இப்போதைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவர்!'- மாவீரனில் சிவகார்த்திகேயன் உடன் பணியாற்றியது பற்றி மனம் திறந்த சரிதா! ட்ரெண்டிங் வீடியோ

போர்த் தொழில் படத்திற்கு பின் சரத்குமாரின் அடுத்த அதிரடி போலீஸ் அவதாரம்... பரம்பொருள் படத்தின் கவனிக்க வைக்கும் டீசர் இதோ!
சினிமா

போர்த் தொழில் படத்திற்கு பின் சரத்குமாரின் அடுத்த அதிரடி போலீஸ் அவதாரம்... பரம்பொருள் படத்தின் கவனிக்க வைக்கும் டீசர் இதோ!

இயக்குனர் வசந்த பாலன் - கைதி & மாஸ்டர் பட நடிகர் அர்ஜுன் தாஸ் கூட்டணியின்
சினிமா

இயக்குனர் வசந்த பாலன் - கைதி & மாஸ்டர் பட நடிகர் அர்ஜுன் தாஸ் கூட்டணியின் "அநீதி"... விறுவிறுப்பான ட்ரெய்லர் இதோ!